கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - குடும்பத்தினர் பரபரப்பு புகார்

x

சென்னை கோடம்பாக்கத்தில் வாசுதேவன் என்ற 18 வயது கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் BCA 2ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு அறைக்கு மாணவர் செல்போன் கொண்டு சென்றதாக கூறப்படும் நிலையில், அவரை கல்லூரியில் தனி அறையில் அடைத்து வைத்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில், தனது மகனின் இறப்பிற்கு காரணம், தனியார் கல்லூரி நிர்வாகம் தான் என அவரது தாயும், தந்தையும் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள மாணவனின் குடும்பத்தினர், காவல்துறை உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்