"முதல் ஆசிரியர் நீங்கதான்.." - ரஜினியை மனம் திறந்து வாழ்த்திய ஹிருத்திக் ரோஷன்

x

39 வருட நினைவுகள் - ரஜினியை வாழ்த்தி நெகிழ்ந்த ஹிருத்திக்

ரஜினிதான் தன்னோட முதல் குரு-னு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் போட்ட பதிவு பேன்ஸை ரொம்ப கவர்ந்திருக்கு.

சினிமாவுக்கு ரஜினிகாந்த் வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ய, தான் நடிகரா முதல் அடிய உங்ககூட சேர்ந்துதான் சினிமாவுல பதிச்சதா ஹிருத்திக் நெகிழ்ந்திருக்காரு. தன்னோட முதல் ஆசிரியர் நீங்கதான்னு ரஜினியை போற்றிருக்காரு.

39 வருசத்துக்கு முன்னாடி பகவான் தாதா படத்துல அப்பாவா ரஜினிகாந்த்தும், மகனா ஹிருத்திக் ரோஷனும் நடிச்சிருப்பாங்க.

இப்ப 39 வருசத்துக்கு அப்புறம் ரஜினியோட கூலி, ஹிருத்திகோட வார் 2 படம் ஒரேநாள்ல ரிலீஸ்... இதை போற்றி பிரபல சினிமா தரவு நிறுவனம் பகிர்ந்த போஸ்ட் வைரல்...


Next Story

மேலும் செய்திகள்