முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் யோகிபாபு

நடிகர்கள் வடிவேலு, சந்தானத்தின் இடத்தை கெட்டியாக பிடித்து, மளமளவென உயர்ந்துள்ள யோகிபாபு, தமிழ்ப் படங்களின், தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி விட்டார்.
முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் யோகிபாபு
Published on
நடிகர்கள் வடிவேலு, சந்தானத்தின் இடத்தை கெட்டியாக பிடித்து, மளமளவென உயர்ந்துள்ள யோகிபாபு, தமிழ்ப் படங்களின், தவிர்க்க முடியாத காமெடி நடிகராகி விட்டார். கடந்தாண்டு மட்டும், அவர் 20 படங்களில் நடித்தார். சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் படங்களில் இவரது நகைச்சுவை பெரிய அளவில் ரசிக்கப்பட்டன. தற்போது, அவர் 19 படங்கள் கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா தமது படங்களில் யோகிபாபு இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறாராம். 'தர்மபிரபு' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்திலும், அவர் நடித்து வருகிறார். இதனால், யோகிபாபு, ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் என, சம்பளம் நிர்ணயித்து உள்ளாராம்.
X

Thanthi TV
www.thanthitv.com