யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'-ல் இணைந்த நயன்தாரா | Nayanthara | Toxic | Yash | Kannada Movie

x

KGF படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷ், டாக்ஸிக் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கன்னட திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்