World Book of Records - உலகளவில் சாதனை படைத்த பாலய்யா
இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் World Book of Records புத்தகத்துல பாலய்யானு அன்போட அழைக்கப்படுற நடிகர் பாலகிருஷ்ணாவோட பெயர் இடம்பிடிச்சிருக்கு.
ஆந்திர சினிமாவை தாண்டி இந்திய அளவுல அதிகம் ரசிக்கப்படுற ஆக்ஷன் ஹீரோவா கொண்டாடப்படுபவர்தான் இந்த பாலகிருஷ்ணா...
1974ஆம் ஆண்டு சினிமாவுல அறிமுகமாகி 50 வருடங்களை கடந்து சாதனை படைச்சிருக்க பாலகிருஷ்ணாவை கவுரவப்படுத்திற விதமா, இங்கிலாந்தில் உள்ள வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் World Book of Records புத்தகத்துல அவரோட பெயரை சேர்த்திருக்காங்க..
இந்த புக்ல இடம்பெறும் முதல் தெலுங்கு ஹீரோவும் பாலய்யாதான்..
சினிமாவில் ஐந்து தலைமுறைக்கு பங்களிப்பை கொடுத்து, பாலகிருஷ்ணா லட்சக்கணக்கானோருக்கு முன்மாதிரியா விளங்குவதாவும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் World Book of Records அமைப்பு புகழ்ந்திருக்கு...
பாலகிருஷ்ணா நடிச்சிருக்க அகண்டா 2 படம் செப்டம்பர் 25ஆம் தேதி ரிலீசாக இருக்கு...
