ஆயுத பூஜைக்கு சேயோன் திரைப்படம் வெளியீடு?
ஆயுத பூஜைக்கு சேயோன் திரைப்படம் வெளியீடு?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படம் ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் இந்த படம், மதுரை வட்டாரத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் பாக்யஸ்ரீ போர்சே, அருள் தாஸ், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வரும் மே 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
