1988ல் ECRல் ஸ்ரீதேவி வாங்கியது என்னாச்சு? - பதறியடித்து ஓடிவந்த கணவர்

x

நடிகை ஸ்ரீதேவி சொத்தில் உரிமை கோர சதி செய்வதாக கணவர் போனி கபூர் வழக்கு

மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

போனி கபூர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்ரீதேவி 1988 ஆம் ஆண்டு இ.சி.ஆரில் உள்ள சொத்தை சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என கூறி வருவதாக மனுவில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மூன்று பேரும் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற்றதாக கூறிய போனி கபூர்,

முதல் மனைவி உயிரோடு இருந்த போது சந்திரசேகரன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இரண்டாவது மனைவி கூறிய நிலையில், மூவரையும் சட்டபூர்வ வாரிசுகளாக கூற முடியாது என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்