மண்ணில் மறைந்தாலும் ரசிகர்கள் மனதில் மறவாமல் போற்றப்படும் விவேக்

Published on

சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்படும் மறைந்த நடிகர் விவேக்கின் பிறந்த நாள் இன்று...

திரையில் காமெடியனாகவும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் வாழ்ந்து மறைந்த விவேக், நடித்த படங்களில் இடம்பெற்றிருக்கும் காமெடி காட்சிகள் அனைத்தும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்... "மனதில் உறுதி வேண்டும்“ படத்தின் மூலம் உறுதியோடு திரைத்துறையில் கால் பதித்த விவேக், அடுத்தடுத்து தான் நடித்த ஒவ்வொரு படத்திலும், தன் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதித்தார்...

பன்முகத்தன்மை கொண்ட விவேக்கின் திறமைகளை பாராட்டி இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது... இவற்றுடன் பல்வேறு பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள், என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியா முழுவதும் தன்னால் இயன்றவரை மரங்களை நட்டார்... பூத உடலால் அழிவை கண்ட அந்த மகத்தான கலைஞன் மரம் போல் வேரூன்றி, தமிழ் ரசிகர்களால் மறவாமல் போற்றப்படுகிறார்...

X

Thanthi TV
www.thanthitv.com