"துரந்தர் 2" படத்தை பாராட்டிய விராட் கோலி

"துரந்தர் 2" படத்தை பாராட்டிய விராட் கோலி

துரந்தர் 2" படத்தை பாராட்டிய விராட் கோலி

இது போன்ற சினிமா அனுபவத்தை இதுவரை பார்த்ததில்லை என 'துரந்தர் 2' படத்தை பாராட்டியுள்ளார் விராட் கோலி.

Breath....

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர் 2’ திரைப்படம் வெளியாகி 1600 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்த படத்தை பாராட்டியுள்ளார்.

அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “துரந்தர் 2 தி ரிவெஞ்ச்“ படத்தை பார்த்தேன். இந்தியாவில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை பார்த்ததில்லை" என்றும் சுமார் 4 மணி நேரம் கவனம் சிதறாமல் பார்த்தேன் என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் ஆதித்யா தார்ரின் திறமை மற்றும் உறுதி இந்த படைப்பில் தெளிவாக தெரிகிறது என்றும் பாராட்டியுள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தின் மூலம் புதிய உயரத்தை எட்டியுள்ளார். உங்கள் நடிப்பு உண்மையிலேயே வியப்பூட்டுகிறது எனவும் ரன்வீர் சிங்கை, விராட் கோலி பாராட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com