விக்ரம் பிரபு நடிக்கும் 'LOVE MARRIAGE' - பர்ஸ்ட் லுக்

x

விக்ரம்பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு LOVE MARRIAGE என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. டாணாக்காரன் படம் விக்ரம்பிரபுவின் நடிப்புக்கு பாராட்டை பெற்று கொடுத்தது. பொன்னியின் செல்வன் உட்பட சில படங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்த்தாலும், ஹீரோவாக மிகப்பெரிய ஹிட் கொடுக்க விக்ரம் பிரபு முயற்சித்து வருகிறார்.

அந்த வகையில், அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் LOVE MARRAIGE படம், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார். இந்த படம் கோடை விடுமுறைக்கு ரிலீசாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்