"விஜய் சேதுபதி பெயரில்.." - கௌரவித்த பெஃப்சி | Vijay sethupathi
பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்பு கட்டிடத்தில், வீடுகட்ட முடியாத தொழிலாளர்களுக்காக, 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு, இயக்குநரும், பெஃப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார். குடியிருப்பு கட்டிடம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி டவர் என்று பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திரைப்படத் தொழிலாளர்களுக்கு பையனூரில் குடியிருப்புகள் கட்ட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், முதலில் 1000 வீடுகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
Next Story
