விஜய் நடிக்கும் 'தளபதி 69' படத்தின் தலைப்பு 'நாளைய தீர்ப்பு'?
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69-வது படத்தின் தலைப்பு குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. முழுநேர அரசியல் பயணத்திற்கு முன்பாக விஜய் தனது கடைசி படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சில மாதங்களில் முடியவுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் கதாநாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' படத்தின் தலைப்பையே 69-வது படத்திற்கும் தலைப்பாக வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடாத நிலையில், குடியரசு தினத்தன்று வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

