கால்ஷீட்டுக்காக சூப்பர்ஸ்டார்களே ஏங்கிய கனவு கன்னி சன்னியாசம் - ரத்தம் கொதிக்கும் சீனியர் சன்னியாசிகள்... விஜய் பட நடிகையால் அதிரும் இந்தியா
கும்பமேளா... இந்தியாவிலுள்ள இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுறது...
அலகாபாத், ஹரித்துவார், உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் அகோரிகள் முதல் சினிமா செலிபிரிடீஸ்கள் வரை ஆன்மீகத்தில் ஈடுபாடுடைய பலரும் கலந்து கொள்வார்கள்.
ஆற்றங்கரையில் புனித நீராடும் பக்தர்கள், பல்வேறு மத சடங்குகளையும் செய்வது வழக்கம். அப்படித்தான் 2025 ஆம் ஆண்டுக்கான கும்பமேளா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.
அதில் பலரது கவனத்தையும் தன் பக்கமாக இழுத்த ஒருவர் தான் மம்த அகுல்கர்னி. 90ஸ்களில் பிரபலமான பாலிவுட் நடிகையாக இருந்தவர் திடீரென சாமியாரானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
சன்னியாசியாக, காவி உடையோடு அவதரித்த குல்கர்னி, தனக்கு தானே பிண்ட தானம் கொடுத்து முற்றும் துறந்ததாக அறிவித்துக் கொண்டார்.
மாற்று பாலினத்தவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்காக செயல்பட்டு வந்த Kinnar Akhara என்ற அமைப்பில் மகா மண்டலேஷ்வர் என அவருக்கு பதவியும் வழங்கப்பட்டது.
இது கடவுளின் ஆசை இனிமேல் நான் என் வாழ்க்கையை முழுமையாக கடவுளுக்கு கொடுக்க போகிறேன் என குல்கர்னி சாந்தமாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்த நிலையில், தற்போது அவர் பதவி ஏற்ற Kinnar Akhara அமைப்பிற்குள் இருந்து குல்கர்னிக்கு எதிராக கலககுரல் எழுந்திருக்கிறது. காரணம்.... அவர் பாலிவுட் நடிகை என்பதையும் கடந்து, அவரது கடந்த காலத்தின் நிழல் உலக நட்பு வட்டாரங்கள் தான்.
நடிகை மம்தா குல்கர்னி 1990-களில் கவர்ச்சி குயினாக வலம் வந்தவர்.
தற்போது, பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களாக வலம் வரும் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் உள்ளிட்ட அனைத்து கான்களும்
90களில் மம்தா குல்கர்னியின் கால்ஷீட் கிடைக்குமா என காத்து கிடந்திருக்கிறார்கள். தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் வைத்திருந்த மம்தா குல்கர்னியை முதலில் அறிமுகப்படுத்தியது, தமிழ் திரையுலகம் தான். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தாயாரித்து அவரது தாயார் ஷோபா இயக்கிய நண்பர்கள் படத்தின் மூலம் தான் மம்தா குல்கர்னி அறிமுகமானார்.
இந்நிலையில், மம்தா குல்கர்னி தொடர் சர்ச்சையான கதாப்பாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்து திரையுலகிலிருந்து காணாமல் போனார்.
அதன்பிறகு, தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு ABROAD-ல் ஷெட்டிலாகிவிட்ட தகவல் கிடைத்ததும் அவருடைய ரசிகர்கள் மனதிலிருந்தும் மம்தா குல்கர்னி மெல்ல FADE OUT ஆனார்.
இந்த சூழலில் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா போலீசார் மம்தா குல்கர்னியின் கணவர் Vicky Goswami-ஐ 2000 கோடி ரூபாய் போதை பொருள் வழக்கில் கைது செய்தனர். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக மம்தா குல்கர்னியும் சேர்க்கப்பட்டார்.
ஆனால் Vicky Goswami-ஐ தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் மம்தா குல்கர்னி மறுத்து வந்தார்.
இந்த நிலையில் தன் மீதான போதை பொருள் குற்றசாட்டை மறுத்த மம்தா குல்கர்னி தலைமறைவாக இருந்தப்படியே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
முழுமையான நீதி விசாரணையின் முடிவில் மம்தா குல்கர்னி குற்றமற்றவர் என Clean seat வழங்கியது நீதிமன்றம். இந்த சூழலில், மம்தா குல்கர்னி 25 வருடங்களுக்கு பிறகு இந்திய திரும்பி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு தன்னுடைய கனவை கட்டமைத்த மும்பையில் கால் வைத்திருப்பதாகவும், இந்த தருணத்தில் மிகவும் நெகிழ்ந்து போகினேன். விரைவில் 2025 ம் ஆண்டு நடக்கவுள்ள கும்பமேளாவில் கலந்துகொள்ளவும், ரசிகர்களை சந்திக்கவும் ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மம்தா குல்கர்னியின் ரீஎன்ட்ரி சினிமாவில் இருக்க போகிறதா ?அல்லது ஆன்மீக அரசியலில் இருக்க போகிறதா ? என அவருடைய ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கலை உலகத்தை கை கழுவிட்டு, காவி உடையை அணிந்திருக்கிறார்.
ஆனால் அவர் Kinnar Akhara வில் மண்டலேஷ்வராக நியமிக்க்பட்டிருப்பது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
அந்த அமைப்பை சேர்ந்த சீனியர் மண்டலேஷ்வர்களின் மகா மண்டலேஷ்வர் ஹிமான்ஷி சக்கி கிரி தனது அதிர்ப்தியை பதிவு செய்திருக்கிறார்.
மம்தா குல்கர்னிக்கு நிழல் உலக தாதாக்களோடு தொடர்பு இருந்த நிலையில், அவரை எப்படி ஒரு புனித பதவியில் அமரவைக்க முடியும் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதோடு Kinnar Akhara மாற்று பாலினத்தவருக்கான அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மம்தா குல்கர்னியை அதில் முக்கியனான பொறுப்பில் நியமித்திருப்பது, அதன் நோக்கத்தை சிதைப்பாதாக இருக்கும் எனவும் காட்டமாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
மற்றொரு பக்கம், திருநங்கைகளுக்கு ஆன்மீகத்தில் அங்கிகாரம் கொடுக்க உருவாக்கபாட்ட ஒரு அமைப்பு, குல்கர்னி போன்ற ஒரு ஸ்டாரால் தான் இன்று நாடெங்கும் பிரபலமாகி இருக்கிறது. எனவே குல்கர்னியின் சேவை நமக்கு தேவை என பாராட்டியும் வருகிறார்கள்.
