விஜய் தேவரகொண்டா Weds ராஷ்மிகா - இன்று டும்..டும்..டும்..!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகாவுக்கும் இன்று திருமணம் நடக்கிறது. அதுவும் இரண்டு முறை நடக்க உள்ளது...

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகாவுக்கும் இன்று திருமணம் நடக்கிறது. அதுவும் இரண்டு முறை நடக்க உள்ளது...

சினிமா நட்சத்திரங்களான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் தேவரகொண்டா, கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா இருவரும், திருமண பந்தத்தில் இன்று இணைகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காலை விஜய் தேவரகொண்டா குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்கிறதாம். அதாவது தெலுங்கு முறைப்படி திருமணம் நடக்கும்.

இதையடுத்து மாலையில் கொடகு மக்களின் முறைப்படி மீண்டும் ஒரு முறை திருமணம் நடத்துகிறார்களாம். இரண்டு பேரின் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவே இப்படி இரண்டு முறை திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் மிகவும் நெருக்கமாக உள்ள மொத்தமே 50 பேர் தான் கலந்து கொள்கிறார்களாம்..

X

Thanthi TV
www.thanthitv.com