Vijay Deverakonda | Rashmika Mandanna | இறுதியாக.., `VIROSH' திருமண க்ளிக்ஸ்
இறுதியாக.., `VIROSH' திருமண க்ளிக்ஸ்
நீண்ட நாள் காதலர்களான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலகலமாக நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக வளம் வந்த விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் உதய்ப்பூரில் தங்களது பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில், திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்
