காஷ்மீர் தாக்குதல் விஜய் ஆண்டனி போட்ட ட்விட்
வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம் என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதிலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அந்நாட்டு மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களும், நம்மை போல் அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புவதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Next Story
