வழக்கத்தையே மாற்றிய அஜித்... ரெஜினா சொன்ன `சர்ப்ரைஸ்' தகவல் | Vidaamuyarchi
விடாமுயற்சி படப்பிடிப்பின்போது அஜித் பரிசளித்த புகைப்படம் மட்டும் தான் தன் வீட்டில் தான் வைத்திருக்கும் ஒரே ஃப்ரேம் செய்யப்பட்ட போட்டோ என்று நடிகை ரெஜினா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், படப்பிடிப்பு துவங்கிய போது நடிகர் அஜித் அங்கிருந்தவர்களை தானே கேமராவில் படம் பிடித்து அதை ஃப்ரேம் செய்து கொடுத்ததாகவும், இது தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகவும் அஜித்திற்கு புகழாரம் சூட்டிய ரெஜினா, தன் வீட்டில் பொதுவாக தன் புகைப்படத்தை ஃப்ரேம் செய்து வைக்கும் வழக்கம் தன்னிடம் இல்லாத போதும், அஜித் கொடுத்த புகைப்படத்தை மட்டும் தான் பத்திரமாக வைத்துள்ளதாக நினைவுகளைப் பகிர்ந்தார்.
Next Story
