வெற்றிமாறன் படத்திற்கு வந்த சிக்கல்..சென்சார் போர்டு சொன்ன பதில்

x

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை என, தணிக்கை குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் நடிகை அஞ்சலி, ரம்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் Bad Girl. இப்படத்தின், டீசரில் குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என ராஷ்ட்ரிய சனாதன கட்சி சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, bad girl என்ற பெயரில் சென்சார் சான்று கோரி இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தெரிவிதுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்