Vetrimaran Speech| ``ஒரு டைரக்டர் இப்படியா பேசுறது’’ - வறுத்து எடுக்கப்படும் வெற்றிமாறன்

Vetrimaran Speech| ``ஒரு டைரக்டர் இப்படியா பேசுறது’’ - வறுத்து எடுக்கப்படும் வெற்றிமாறன்

``ஒரு டைரக்டர் இப்படியா பேசுறது’’ - வறுத்து எடுக்கப்படும் வெற்றிமாறன்.. கொந்தளிக்கும் சோஷியல் மீடியா

"எனக்கு கதைதான் முக்கியம், லிப் சிங்க் அல்ல" என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி நடிப்பில் 'அரசன்' திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய கதையாக உருவாகும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி, வன்முறையை அழகியலாகக் காட்டுவதாக விமர்சனங்களைச் சந்தித்தது. இந்நிலையில், நிகழ்வு ஒன்றில் பேசிய வெற்றிமாறன், தனது படங்களில் உதட்டசைவுக்கும் வசனத்திற்கும் பொருத்தமில்லாத 'லிப் சிங்க்' பிரச்சனை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில் தமக்கு கதைதான் முக்கியம் என்றும், லிப் சிங்க் முக்கியம் என நினைப்பவர்கள் அதை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். வெற்றிமாறன் பொறுப்பற்ற பதிலை கூறி உள்ளதாக கொந்தளித்துள்ள சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

X