ஓ அங்கேயே திருமணமா? - படு வைரலாகும் வரலட்சுமி கல்யாண பிக்ஸ்

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் ஜோடிக்கு தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற இருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com