

கத்தியை சுழற்றி, மிரள வைத்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர் நடிக்கும், 'ராஜ பார்வை' என்ற படத்தில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜக் கத்தியை சுழற்றும் காட்சியை, அவர் தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன் என்று கூறும் வரலட்சுமி, இந்தப் படத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.