இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.
இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்
Published on

ஒரு பொன்மாலைப் பொழுதில் திரையுலகில் மெல்லிய தென்றலாய் நுழைந்த வைரமுத்து, தன் பாடல்களால் இசையையும், மொழியையும் வசியப்படுத்தியவர். கிராமத்து புழுதி மண்ணில் தவழ்ந்து விளையாடிய வைரமுத்து 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். வடுகப்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முடித்தார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையில் புகுந்து, திரைப்பாடல்களில் வார்த்தை ஜாலம் நிகழ்த்தினார். 19 வயதிலேயே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்தபோது வைகறை மேகங்கள் என்ற தலைப்பில் தனது முதல்

கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

தனது 28 ஆம் வயதிலேயே இதுவரை 'நான்' என்ற சுயசரிதை எழுதிய வைரமுத்துவின் பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும்,

கல்லூரிகளிலும் பாடமாக உள்ளது.1980 ல் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலக பயணத்தை தொடங்கிய, கவிஞர் வைரமுத்து, அடுத்த ஆண்டே, சிறந்த பாடலாசிரியருக்கான, தமிழக அரசின் விருது பெற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com