``நான் ரெடி'' - தவெகவில் இணையும் தர்ஷா குப்தா
தவெக தலைவர் விஜய் அழைத்தால், அவரது கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என பிக்பாஸ் புகழ் நடிகை தர்ஷா குப்தா கருத்து தெரிவித்து உள்ளார். தை அமாவாசையை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஐயன் அடைப்பு பகுதியில் உள்ள பிரத்தியங்கரா தேவி ஆலயத்தில் நடைபெற்ற, ஒரு லட்சத்து 8 எலுமிச்சை யாக சிறப்பு பூஜையில் பங்கேற்றப் பின்னர், இதை அவர் தெரிவித்தார்.
