அல்லு அர்ஜுன் பிறந்தநாளன்று வெளியாகும் புதிய பட டைட்டில்?
அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணில உருவாகுற புதிய படத்தோட டைட்டில்... அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்னைக்கு வெளியாக வாய்ப்பிருக்குறதா சொல்லப்படுது..
புஷ்பா 2 படத்த அடுத்து அல்லு அர்ஜுன் ஹீரோவா நடிக்குற படத்த அட்லீ இயக்குகிறாரு...
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தில தீபிகா படுகோன் நாயகியா நடிக்கிறாங்க... ராஷ்மிகா மந்தனா உள்பட மேலும் சில நாயகிகள் நடிக்குறாங்க...
மெகா பட்ஜெட்ல உருவாகும் இந்த படத்தோட டைட்டில் டீசர், அல்லு அர்ஜுன் பிறந்த நாள முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ளதா தகவல் கசிஞ்சுருக்கு...
அல்லு அர்ஜுன் ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகள உள்ளடக்கிய 4 வெவ்வேறு வேடங்கள்ல வர்றாராம்...
இதன் விஎஃப்எக்ஸ் காட்சிகள், ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய ஸ்டூடியோக்கள்ல நடைபெறவிருக்கு...
தற்போது மும்பையில நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு, செப்டம்பர்ல முடிவடையும்... அடுத்த வருடம் படம் ரிலீஸாகும்னு படக்குழு அறிவிச்சுருக்கு
