சரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...

'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர்.
சரவணன், திரிஷா இணையும் 'ராங்கி'...
Published on
'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று பெயரிட்டுள்ளனர். 'எங்கேயும் எப்போதும்' மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 'எங்கேயும் எப்போதும்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்தார். இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி, ஓய்வில் இருந்த சரவணன். தற்போது, பழைய நிலைக்கு திரும்பினார். இவருக்கு உதவும் விதமாக, தாம் உருவாக்கி வைத்திருந்த கதையை கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இக்கதைக்கு 'ராங்கி' என்று தலைப்பிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com