நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு
Published on

நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, நடிகர் சூர்யா-45 படக்குழுவினருடன் கொண்டாடினார். கங்குவா படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தை நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா, நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45வது படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 13-ம் தேதி தான் த்ரிஷா நாயகியாக நடித்த முதல் படமான மௌனம் பேசியதே திரையில் வெளியானது. இந்த நிலையில் நடிகை திரிஷா நடிக்க வந்து 22 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து, சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா கேக் வெட்டி கொண்டாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com