`Hero’ ஆகிறார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் Abishan - `Heroine’ பேர கேட்டா மெர்சல் ஆயிடுவீங்க..

ஹீரோ அவதாரம் எடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன்

டூரிஸ்ட் ஃபேமிலி என்ற தரமான படத்தை கொடுத்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், ஹிரோவா அறிமுகமாகிறார்.

தான் இயக்குன டூரிஸ்ட் ஃபேமிலி படத்துலேயே சசிகுமார், சிம்ரன்கூட சேர்ந்து முக்கியமான கேரக்டர்ல அவரே நடிச்சி அசத்தியிருப்பாரு.

இப்ப, சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்குற படத்துல சத்யா என்ற கேரக்டர் மூலமா ஹீரோவாக அறிமுகம் ஆகுறாரு அபிஷன்.. இந்த செய்திய கேட்டு, அவரோட நலம்விரும்பிகள் அபிஷனை பாராட்டிட்டு வராங்க...

இதேபடத்துல மலையாளத்துல நடிச்சி இளசுகளை கவர்ந்த அனஸ்வரா ராஜன் கதாநாயகியா நடிக்கப்போறாங்க.. 

X

Thanthi TV
www.thanthitv.com