அலட்சியப்படுத்திய வடமாநில Staff..பிரபல நடிகர் மண்டைக்கு ஏறிய சூடு..ஸ்டார் ஹோட்டல்லயே இந்த அநியாயமா? - மக்களே உஷார்.. தீயாய் பரவும் வீடியோ

அலட்சியப்படுத்திய வடமாநில Staff..பிரபல நடிகர் மண்டைக்கு ஏறிய சூடு..ஸ்டார் ஹோட்டல்லயே இந்த அநியாயமா? - மக்களே உஷார்.. தீயாய் பரவும் வீடியோ
Published on

குன்னூரில் பிரபல தனியார் ஓட்டலில் வழங்கப்பட்ட தக்காளி சாஸில் புழுக்கள் நெளிந்ததாக, துணை நடிகர் விஜய் விஷ்வா, பரபரப்பு புகார் அளித்துள்ளார்.பிகில், மாயாண்டி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் விஷ்வா என்ற அபி சரவணன், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளார். குன்னூரில் உள்ள ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டபோது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தக்காசி சாஸில் புழுக்கள் நெளிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதையடுத்து, புகார் தெரிவிப்பதற்காக, உணவு பாதுகாப்புத் துறை, 108 ஆம்புலனஸ், காவல் துறை என ஒவ்வொரு துறையினரையும் அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். நீண்ட நேரமாகியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர், ஓட்டல் நிர்வாகத்தினர் மன்னிப்பு கேட்டபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com