மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2025) ThanthiTV
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில், மேக வெடிப்பு காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு... கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம், குடியிருப்புகளை வாரிச் சுருட்டிய பகீர் காட்சி...
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கீர் கங்கா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு... தாராலியில் குடியிருப்பை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், பலர் சிக்கி இருக்கலாம் என தகவல்...
உத்தரகாண்ட் மாநிலம் தாராலியை தொடர்ந்து, சுகி SUKHI கிராமத்திலும் மேக வெடிப்பால் பெரு வெள்ளம்...கண்ணிமைக்கும் நேரத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தில், பொதுமக்கள் சிக்கிய பரபரப்பு காட்சி...
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட உத்தரகாசியில், 3 ITBP, 4 NDRF குழுக்கள் மீட்புப் பணியில் தீவிரம்... 20 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்...
உத்தர்காசியில் மேகவெடிப்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்... பாதிக்கப்பட்ட அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் பதிவு...
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு... ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை மையம்...
கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்... பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்...
புதுச்சேரியில் நேற்று பெய்த கன மழையால் வெள்ளவாரி ஓடையில் ஆர்ப்பரித்த வெள்ளப்பெருக்கு... ஓட்டுநருடன் மினி வேன் சிக்கிக்கொண்ட நிலையில், பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்...
சென்னையில், 2028 இறுதிக்குள் பறக்கும் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை... சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு... ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை...
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்... நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்...
