Tiruchendur| Actress Deepa Babu | திருச்செந்தூர் கோயிலுக்குள் செய்த பகீர் செயல் - சர்ச்சையில் நடிகை
திருச்செந்தூர் கோயிலுக்குள் செய்த பகீர் செயல் - சர்ச்சையில் சின்னத்திரை நடிகை
திருச்செந்தூர் கோயிலுக்குள் புகைப்படம் - சர்ச்சையில் சின்னத்திரை நடிகை தீபா பாபு
திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதியின்றி செல்போன் கொண்டு சென்று புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை தீபா பாபு சர்ச்சையில் சிக்கி உள்ளார். சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள், செல்போனில் புகைப்படம் எடுக்க மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் தடையை மீறி கோயிலுக்குள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகனுடன் சாமி தரிசனம் செய்ய வந்த சின்னத்திரை நடிகை தீபா பாபு, கோயிலின் உள்பிரகாரம் மற்றும் கொடிமரத்தின் அருகே நின்று புகைப்படம் எடுத்ததுடன், தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள பக்தர்கள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
