``தலைவரோட நடிச்சதே பெருசு.. சம்பளமெல்லாம் தேவையா?’’ சினிமா உலகையே திரும்ப வைத்த அமீர்கான்

x

ரஜினியுடன் நடித்ததே மிகப்பெரிய பரிசு - சம்பளம் எதற்கு? - அமீர்கான்

கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைத்த காட்சியில் நடித்ததில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமீர்கான் பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தில் பாலிவுட் உச்ச நட்சத்திரமான அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அமீர்கானை அழைத்து வந்து ரஜினிக்கு பீடி பற்ற வைக்க வைத்ததோடு, முக்கியத்துவம் இல்லாத கேரக்டரை கொடுத்துவிட்டதாக இணையத்தில் விமர்சனம் எழுந்தது.

இதுகுறித்து பேசிய அமீர்கான், தான் ரஜினியின் படுதீவிரமான ரஜினி ரசிகன் என்பதால், அவருடன் இணைந்து நடித்ததே பெரிய பெருமை என குறிப்பிட்டார்.

ரஜினி மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும், அவருடன் நடித்ததே மிகப்பெரிய பரிசு என்பதால், நான் சம்பளம் பற்றி யோசிக்கவே இல்லை எனவும் அமீர்கான் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்