மிருணாள் தாக்கூர் ரிலீஸ் செய்த வீடியோவால் வெடித்த பிரளயம்
நடிகை பிபாஷா பாசுவை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக நடிகை மிருணாள் தாக்குர் வருத்தம் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகை மிருணாள் தாக்குர் வெளியிட்ட வீடியோவில், பிபாஷா பாசுவை உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பிபாஷா பாசு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நடிகை மிருணாள் தாக்குர் விளக்கமளித்துள்ளார். அந்த வகையில், தாம் நகைச்சுவையாக கூறிய வார்த்தைகள் பிறரை புண்படுத்தும் என நினைக்கவில்லை என்றும், இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மிருணாள் தாக்குர் கூறியுள்ளார்.
Next Story
