விஜய் தேவரகொண்டாவின் "ரணபலி" படத்தின் மிரட்டலான டைட்டில் டீஸர்
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 14வது படமான, ரணபலி திரைப்படத்தின் மிரட்டலான டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும், அந்த சூழலில் கதாநாயகனாக உருவெடுத்த ரணபலி என்கிற வீரனின் கதையை மையமாக வைத்தும், இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் ரணபலி திரைப்படம், வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Next Story
