“ஜனநாயகன்“ படத்தின் மறு தணிக்கை மீண்டும் நடைபெறவில்லை...
“ஜனநாயகன்“ படத்தின் மறு தணிக்கை மீண்டும் நடைபெறவில்லை...
Summary
விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்“ படத்தின் மறு தணிக்கை மீண்டும் நடைபெறவில்லை...
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் சிக்கலால் தாமதமாகி, நீதிமன்றம் வரை சென்றது.
பின்னர் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது. மார்ச் 9ஆம் தேதி சென்னையில் மறு தணிக்கை நடைபெற இருந்தது. ஆனால் சென்சார் குழு உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் நேற்று மறு தணிக்கை நடைபெறும் என தகவல் வெளியான நிலையில், எந்த அழைப்பும் படக்குழுவிற்கு வராததால் மீண்டும் நடக்கவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
