'கண்ணப்பா' திரைப்படத்திற்கு வந்த பிரச்சனை
பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள "கண்ணப்பா" திரைப்படம், வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை வைத்திருந்த நபர் ஒருவர், அந்த ஹார்ட் டிஸ்க்குடன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், போலீஸார் அந்நபரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
