மேடை ஏறியதும் தெலுங்கில் பேசி டோலிவுட்டையே மிரளவிட்ட SK
மதராஸி திரைப்பட ப்ரமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற சிவகார்த்திகேயன், தெலுங்கில் சரளமாக பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம், செப்டம்பர் 5ம்தேதி வெளியாக உள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடந்த பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு தெலுங்கில் உரையாடினார். அமரன் படத்திற்கு கொடுத்ததை போன்றே, இப்படத்திற்கும் பேராதரவு தர வேண்டும் என, தெலுங்கானாவில் உள்ள தன் ரசிகர்களிடம் அன்பான கோரிக்கை வைத்தார்.
Next Story
