விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிக்கும் ‘இரண்டு வானம்‘ படத்தின் முதல் பாடல்
விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிக்கும் ‘இரண்டு வானம்‘ படத்தின் முதல் பாடல்
பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ராட்சசன்‘ படத்திற்குப் பிறகு, விஷ்ணு விஷால் - இயக்குனர் ராம்குமார் மீண்டும் இணைந்துள்ள ‘இரண்டு வானம்‘ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையில், 'வெள்ளிச்சுடரே' எனத் தொடங்கும் இந்த மெலடி பாடல் ரசிகர்களைக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
