Actor Srikanth | கோலிவுட்டை உலுக்கிய கொக்கைன்பார்ட்டி.. ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் அடிதடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், ஸ்ரீகாந்தின் தீங்கிரை படத்தை தயாரிப்பது தெரியவந்தது.
இதனிடையே, பிரசாத்தின் நண்பரான பிரதீப் போதைப்பொருள் விற்பது தெரியவர அவரை கைது செய்து விசாரித்ததில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் விற்றது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாக, ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
பிரதீப் என்பவரிடம் கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் போதைப்பொருள் வாங்கி இருப்பது தெரியவந்தது.
மேலும், பிரதீப் அளித்த வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்காக 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதோடு, ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பார்ட்டியில் ஸ்ரீகாந்த் கொகைன் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரசாத், பிரதீப் இருவருமே சிறையில் இருக்க, தற்போது ஸ்ரீகாந்திற்கு கொகைன் கொடுத்தது யார் என அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
