வேலைக்கார பெண் செய்த துரோகம்.. மன்னிப்பு வழங்கி மீண்டும் வேலையில் சேர்த்த நடிகை ஷோபனா

x

சினிமா பிரபலங்கள் வீட்டில் பணியாளர்களே தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த சூழலில், இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தின் பிரபல ஹீரோயின் ஒருவரும் இணைந்திருக்கிறார்... பார்க்கலாம் விரிவாக...

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 100 சவரன் தங்க நகைகளும், 30 கிராம் வைர பொருட்கள் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான நில ஆவணங்களை வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் திட்டமிட்டு திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இதை தொடர்ந்து பிரபல பாடகர் மற்றும் நடிகருமான விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கூறி அவரது மனைவி போலீசில் புகாரளித்தார்...

விஜய் யேசுதாஸின் வீட்டில் பணிபுரியும் பணியாளர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு இடியாப்ப சிக்கல்போல் நீண்டு கொண்டே செல்ல, போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

இந்த வலையில் நடிகர் ரஜினிகாந்தின் வெற்றிப்படங்கள் வரிசையில் முதன்மை படமான தளபதி படத்தின் ஹீரோயினும் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் நடிகை சோபானாவின் வீட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த விஜயா என்பவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.

வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் சோபானாவின் தாயை விஜயா உடனிருந்து கவனித்து வந்த நிலையில், தாயார் வைத்திருந்த பணம் அடிக்கடி மாயமானதால் குழம்பி போன சோபனா போலீசில் புகாரளித்திருக்கிறார்.

இந்நிலையில், வீட்டிலிருந்து பணத்தை தான் திருடியதாகவும், சிறுக சிறுக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை திருடி, அப்பணத்தை ஜிபே மூலம் தனது மகளுக்கு அனுப்பியதாகவும் கூறி பணத்தை விஜயா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால், போலீசிடமிருந்து புகாரை வாபஸ் பெற்ற நடிகை சோபானா, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்காமல், திருடிய பணத்தை வீட்டில் வேலை பார்த்தே கழிக்குமாறு கூறி எச்சரித்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்