கதறி அழுது வீடியோ வெளியிட்ட `தீராத விளையாட்டு பிள்ளை' நடிகை

x

நடிகை தனுஸ்ரீ தத்தா, தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக கூறி கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் 2009ம் ஆண்டு "Horn Ok Pleassss" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது படத்தில் நடித்த நடிகர் நானா படேகர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து திரையுலகில் இருந்து விலகி இருந்த தனுஸ்ரீ, 2018ம் ஆண்டு இந்தியாவின் MeToo இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 2018ம் ஆண்டு முதல் தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாகவும், வீட்டில் அதிக சத்தங்கள் கேட்பதாகவும் கூறியுள்ளார். இதனால், கடும் மன உளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாம் மிகுந்த சோர்வாக இருப்பதால் யாராவது தனக்கு உதவிட வேண்டும் என்று கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்