ரசிகர்களிடம் வசமாக சிக்கிய நாக சைதன்யா?

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன... நாக சைதன்யாவும் சோபிதாவும் லண்டனில் எடுத்த புகைப்படம் ஏற்கனவே பரவி இருவரும் காதலிப்பதாக புரளி கிளம்பியது... இந்நிலையில், மீண்டும் இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்... சுற்றுலா சென்ற இடத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நாக சைதன்யா... அதே போல் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவும் ஏதோ காட்டிற்குள் ஜீப்பில் செல்வதைப் போல புகைப்படத்தைப் பகிர இணையத்தில் ரசிகர்கள் 2 புகைப்படங்களுக்கும் முடிச்சுப் போட்டு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளதாகத் தகவல் பரப்பி வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com