"இந்த விருது கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி" - நடிகை ஷோபனா நெகிழ்ச்சி
பத்ம விருது கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி - நடிகை ஷோபனா
பத்மஸ்ரீ விருதுபெற்ற தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்தி, பத்மபூஷன் விருது பெற்ற நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஷோபனா, இந்த விருது கிடைத்ததற்கு கடவுளுக்கும், தனது குருக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய தட்சிணாமூர்த்தி, தவில் இசைக்கு அளித்த பங்களிப்புக்காக "பத்ம ஸ்ரீ" விருது வழங்கி கவுரவித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து பேசிய நல்லி குப்புசாமி, பத்மபூஷன் விருது கிடைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி இதற்கு காரணமான வாடிக்கையாளர்கள், நெசவாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
Next Story
