நாளை வெளியாகிறது "தளபதி 69" ஃபர்ஸ்ட் லுக்

x

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு அவரின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" என்ற பெயரே வைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் "நாளைய தீர்ப்பு" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்