

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் "தளபதி 64" படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் நடிகர் விஜய் சேதுபதி பெயர், அவரது ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் "மக்கள் செல்வன்" என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. மூத்த நடிகரான விஜய், தனது படத்தில் வளரும் நடிகரான விஜய் சேதுபதிக்கு, அவரது அடைமொழியை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.