Rajendra Prasad | MGR | தமிழ் திரையுலகிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தெலுங்கு நடிகர்

தமிழ் திரையுலகிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தெலுங்கு நடிகர்

``இனி வாழ்க்கையில ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்’’ - தமிழ் திரையுலகிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தெலுங்கு நடிகர் #mgr #rajendraprasad எம்ஜிஆர் குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் தமிழ்த் திரையுலக முன்னாள் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் குறித்து விருது விழாவில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததால் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற காந்தா ராவ் தேசிய விருது விழாவில் பேசும்போது, நடிகர் காந்தா ராவை புகழ்ந்த ராஜேந்திர பிரசாத், காந்தா ராவை கண்டால் எம்.ஜி.ஆர் பயப்படுவார் என ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது‌. இதற்கு தமிழ் திரையுலகில் கடும் எதிர்ப்பு எழுந்தது. நடிகர்கள் விஷால், நாசர் உள்ளிட்டோர் அந்த கருத்தை கண்டித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ராஜேந்திர பிரசாத் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com