கண்கலங்கிய `பார்க்கிங்' பட இயக்குனர்- இணையத்தில் வைரலான வீடியோ

x

3 தேசிய விருதுகள் - கண்கலங்கிய "பார்க்கிங்" பட இயக்குனர்

தேசிய விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்து "பார்க்கிங்" பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தமிழில் வெளியான 'பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்காக இந்த படம் தேர்வாகியது. மேலும், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார். இதனால், மகிழ்ச்சியில் கண்கலங்கிய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நண்பர்கள் மற்றும் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்