'காலா' படத்தை கலாய்க்கும் 'தமிழ் படம் 2' - டைனோசருடன் காட்சி தரும் சிவா

தமிழில் வெளியான படங்களை கேலி செய்து, 'தமிழ் படம்' என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் வெளியானது
'காலா' படத்தை கலாய்க்கும் 'தமிழ் படம் 2' - டைனோசருடன் காட்சி தரும் சிவா
Published on

தமிழில் வெளியான படங்களை கேலி செய்து, 'தமிழ் படம்' என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் வெளியானது. இதன் இரண்டாம் பாகம் இந்த மாதம் வெளியாகிறது. இதற்காக, 'தமிழ் படம் 2' சார்பாக தினமும் போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில், ரஜினியின் 'காலா' பட போஸ்டரை கிண்டல் செய்துள்ளனர். 'காலா' படத்தில் ரஜினி அருகில் ஒரு நாய் இருப்பது போன்று வெளியான போ​ஸ்டரை கேலி செய்யும் விதத்தில், 'தமிழ் படம் 2' கதாநாயகன் சிவா அருகில் டைனோசர் இருப்பது போன்ற போ​ஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது, இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com