விஜய் அரசியல் குறித்து மனம் திறந்த ஆண்ட்ரியா.. வடசென்னை 2-ல் மீண்டும் சந்திரா என்ட்ரி | TVK Vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியா, அங்கு கூடியிருந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாட்டு பாடி, அவர்களுடன் செல்பி எடுத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு அரசியலில் வரும் நோக்கம் இல்லை எனவும், வடசென்னை 2 படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில்‌ மீண்டும் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com