Tamil Cinema | Box Office | இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வியக்க வைக்கும் சாதனை படைத்த 4 படங்கள்

x

தமிழ் சினிமா, அக்டோபர் மாதம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துள்ளது. இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1' டியூட் மற்றும் பைசன் ஆகிய 4 படங்கள் மட்டுமே இணைந்து இந்த வசூல் சாதனையை படைத்துள்ளன. காந்தாரா சாப்டர் 1' படம், தமிழில் டப் செய்யப்பட்ட படமாக இருந்தபோதும், தமிழகத்தில் 70 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. டியூட் உலகளவில் தனது முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், பைசன் 10 நாட்களில் 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ் சினிமாவில் 26 புதிய படங்கள் வெளியான நிலையில், இந்த 4 படங்கள் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மாதமாக மாற்றியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்