தவறு செய்திருந்தால் சிறைக்கு செல்ல தயார் - நடிகர் விஷால்

தவறு நடந்ததை நிரூபித்தால் சிறை செல்ல தயாராக உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தவறு செய்திருந்தால் சிறைக்கு செல்ல தயார் - நடிகர் விஷால்
Published on

தயாரிப்பாளர் சங்க முறைகேடு தொடர்பான விவகாரத்தில், சென்னை தி.நகரில் உள்ள அலுவலக பூட்டை உடைக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட நடிகர் விஷால் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் சீல் வைத்ததோடு, பிரச்சினை முடிந்த பின்னரே அலுவலகம் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த பிரச்சினை தொடர்பாக, நேற்று காலையில் கைது செய்யப்பட்ட நடிகர் விஷால், மாலையில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், சிறைக்கு செல்லவும் தயார் எனவும் ஆவேசமாக கூறினார்.

ஆதரவு நிர்வாகிகளுடன் பல மணி நேரம் ஆலோசனை

சென்னை தி.நகரில் உள்ள அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு நேற்று இரவு விஷால் சென்றார். அங்கு, பல மணி நேரமாக, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், நள்ளிரவு 12 மணி அளவில் ஆலோசனையை முடித்தார். ஆலோசனை நடந்தபோது, ரித்தீஷ் உள்ளிட்ட எதிர் தரப்பினரும் அங்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசாரும் நள்ளிரவில் குவிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com